இன்னும் நிறைய வீடியோ உள்ளது, அதனையும் வெளியிடுவோம் : தினகரன் ஆதரவாளர்

தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை பெற்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது சிகிச்சை பெற்ற வீடியோ இல்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தினகரன் ஆதரவாளாரான வெற்றிவேல், மேலும் கூறுகையில், ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் சென்ற போது அவரை எங்கு அட்மிட் செய்யலாம் என அமைச்சர்கள் விவாதித்த வீடியோகள் நிறைய உள்ளன. அதனையும் வெளியிடுவோம்.’ என தெரிவித்தார். மேலும், ‘ஆர்கே நகர் தேர்தலுக்காக இதனை வெளியிடவில்லை, இந்த வீடியோவை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.’ எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment