ஒரு முத்தக்காட்சிக்கு இவ்வளவு கஷ்டபட வேண்டுமா…?? -நடிகர் அரவிந்த்சாமி

 

 

ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டும் இந்த விழா சென்னையில் நேற்று துவங்கியது. இதில் கலந்துகொண்ட அரவிந்த்சாமி பேசுகையில், “தற்போதுள்ள நிலையில் ஒரு படத்தை எடுப்பதை விட ஒரு முத்த காட்சிக்கு தான் அதிகம் கஷ்ட படவேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாட்ஸாயனா காமசூத்திரத்தைப் பற்றி எழுதி வைத்தார். பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள இந்தப் படைப்பு பாலுணர்வு தொடர்பான ஒரு இலக்கியமாகவே இன்றும் போற்றப்படுகிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரண முத்தக்காட்சிக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கு. காதல் காட்சிகளை விட பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சிகள் தான் இன்றைய படங்களில் அதிகமாக காட்டப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.


மேலும், இந்த விழாவினை நடத்த தமிழக அரசு எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை. அடுத்த ஆண்டாவது அரசு சார்பில் நிதி உதவி செய்தாக வேண்டும். அப்படியில்லை எனில், நிகழ்ச்சியை நடத்துவதே தடைபட்டு விடும் என்று திரையுலகினரின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் இதனை முன்வைத்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment