CSK VS RR: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திணறல் துவக்கம்.. மீண்டும் வேலையை காட்டும் சென்னை மைதானம்!

  • சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி உஷாராக பந்து வீச தீர்மானித்தது. சென்னை மைதானத்தின் ஆடுகளத்தை சரியாகப் புரிந்துகொண்ட அந்த அணி சரியாக பந்துவீச்சை தேர்வு செய்தது .

பந்துவீச்சை தேர்வு செய்தது அவர்களுக்கு பலனளித்தது. ஒரு ரன் எடுப்பதற்குள் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை பின்னர் வந்த சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஓரளவிற்கு தடுத்து ஆடினார். தற்போது வரை 14 அவர்களுக்கு 88 ரன் மட்டுமே அடுத்துள்ள சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் தோனி 28 ரன்களுடனும் டிவைன் பிராவோ ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

author avatar
Srimahath

Leave a Comment