நியூசிலாந்தில் துப்பாக்கி விற்பனைக்கு தடை- ஜேசினா ஆர்டர்ன்

  • ராணுவ பாணியிலான பாதியளவு தானியங்கி துப்பாக்கி மற்றும் அசால்ட் ரைஃபிள்கள் விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக கூறினார்.
நியூசிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை  இரண்டு மசூதிகளில் நடந்திய  துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் நியூசிலாந்து நாட்டையே உலுக்கியது.
துப்பாக்கிச்சூடு நடத்திய  பிரெண்டன் டாரண்ட்  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும்  கொலை குற்றச்சாட்டு பதிவு செய்த நீதிபதி பிரெண்டன் டாரண்ட் ஏப்ரல் மாதம் 5–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியும், 18 வயதில் பகுதியளவு தானியங்கி துப்பாக்கியும் வாங்க முடியும்.
இந்நிலையில் நியூசிலாந்தில் துப்பாக்கி வாங்குவது மற்றும் வைத்து கொள்ளவும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து  நியூசிலாந்து பிரதமர்  ராணுவ பாணியிலான பாதியளவு தானியங்கி துப்பாக்கி மற்றும் அசால்ட் ரைஃபிள்கள் , மேலும் துப்பாக்கிகளின் வேகத்தை அதிகரிக்க உதவும் துப்பாக்கி மேகசின் மற்றும் பம்ப் ஸ்டாக்கை ஆகியவை உடனடியாக தடை விதிக்கப்படும் என ஜேசினா ஆர்டர்ன் கூறியுள்ளார்.
author avatar
murugan

Leave a Comment