அடடே இவ்வளவு பயன்களா….? கிர்ணி பழத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா….?

கிர்ணி நம்மில் அநேகருக்கும் பாத்திருக்க மாட்டோம். ஆனால் சிலருக்கு இந்த பழம் குறித்து தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த பழம் ஜூஸ் போட்டு குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பழம் பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த பழத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது.

சத்துக்கள் :

கிர்ணி பழத்தில் வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளது. இந்த பழத்தில் உள்ள வாசம் பலருக்கு பிடிப்பதில்லை. எனவே இதை அதிகமானோர் விரும்புவதில்லை. ஆனால் இதனால் நமக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா…?

நுரையீரல் பாதுகாப்பு :

புகை பிடிப்பதினால் பலருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டதால், இந்த பழம் நுரையீரல் முழுவதையும் சுத்தப்படுத்தி நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

பார்வையை மேம்படுத்துகிறது :

பார்வையை மேம்படுத்துவதில் இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. கண் விழித்திரை மற்றும் வயது அதிகரிப்பதால் ஏற்படும் பார்வை குறைவில்லை நீக்கி பார்வைத்தியை மேம்படுத்துகிறது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது :

இன்று அதிகமானோர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மிக குறுகிய நாட்களிலேயே தங்களது வாழ்நாட்களை முடித்துக்கொள்கின்றனர். இந்த நிலையில் உள்ளவர்கள் இந்த பழத்தை உணவில் சேர்த்து கொள்ளும் போது, இந்த பழத்தில் அதிகமாக உள்ள கிளைசிமிக் இண்டெக்ஸ் என்ற சத்து நீரிழிவு நோயிலிருந்து விடுதலை அளிக்கிறது.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது இதிலிருந்து பூரண விடுதலை அடையலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment