தென்னிந்திய திருச்சபையின் பெண்கள் மாநாடு நிறைவு

தென்னிந்திய திருச்சபையின் (CSI) பெண்கள் ஐக்கிய மாநாடு  இந்தமுறை மூன்று நாள் மாநாடு திருச்சியில் தொடங்கியது. இது பிஷப் ஹீபர் கல்லூரியில் கடந்த 17ம் தேதி துவங்கியது. இந்த மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த மாநாட்டை திருச்சி-தஞ்சாவூர் டயோசஸ் நடத்தியது. இந்த நிகழ்ச்சியின்  நிறைவு நாளான நேற்று சிஎஸ்ஐ பெண்கள் ஐக்கிய பொதுச்செயலாளர் சிந்தியா ஷோபா ராணி வழிகாட்டுதல் வழங்கினார். டோர்னகால் டயோசஸ் தலைவர் சுவந்தா பிரசாத் ராவ் துவக்கி வைத்தார்.

தமிழ் மண்டல தலைவர் ஆனி ஹேமலதா வரவேற்றார். துணைத்தலைவர் லீலா மனோஹரி ஜோசப் தலைமை வகித்து உரையாற்றினார். பெண்கள் ஐக்கிய சங்க தலைவர் லில்லி வசந்தகுமார், உபதலைவர் மெர்சி சுரேஷ்குமார், செயலாளர் பரிமளா கலாராணி, பொருளாளர் ரோஸ்லின்ஜெயசிங் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ் மண்டல செயலாளர் இந்திராணி மனோகர்லால் நன்றி கூறினார். மாநாட்டை முன்னிட்டு பெண்கள் அமைப்பினர் தயாரித்த பல்வேறு பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற்றது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment