இன்று இந்தியா – சீனா இடையே 9-வது சுற்று காம்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை!

இன்று கிழக்கு லடாக்கின் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக சீனா – இந்தியா இடையே 9வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்ற நிலையில், லடாக் எல்லையில் பாங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் இந்தியா மற்றும் சீனா இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து சீன ராணுவம், லடாக் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவித்திருக்கிறது.

இதன்காரணமாக எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் வழக்கமான ரோந்து பணியை மேற்கொள்வதற்கு  சீனா இடையூறாக செயல்படுவதாகவும், இதைத்தொடர்ந்து சீனாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக ராணுவப் படைகளை அனுப்பி உள்ளது. இதனால் பாங்கோங் சோ ஏரி, கால்வன் பள்ளதாக்கு, டெம்சோக் ஆகிய பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

இரு நாட்டிற்கும் இடையே அடிக்கடி ஏற்படும் மோதல் போக்கை தவிர்க்க பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்தது.

இந்நிலையில் இன்று கிழக்கு லடாக்கின் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக சீனா – இந்தியா இடையே 9வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த பேச்சுவார்த்தை, இந்தியாவில் சுசுல் துறைக்கு எதிரே உள்ள மோல்டோவில் நடைபெறவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.