BREAKING:குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 பேர் தகுதிநீக்கம் – டிஎன்பிஎஸ்சி அதிரடி.!

  • குரூப் 4  தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
  • முறைகேடு விவகாரத்தில் 99 தேர்வர்களுக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்துள்ளது   டிஎன்பிஎஸ்சி.   
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில்  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கான தரவரிசை பட்டியல் கடந்த 2019-ஆம்  ஆண்டு நவம்பர் 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். அவர்களில் பலர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக  இருந்ததால், மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.பின்னர் மற்ற தேர்வர்கள் புகார் அளித்தனர்.அந்த புகாரில் அதிகம் சிவகங்கை மாவட்டத்தை சார்ந்தவர்கள் எனவும் புகாரில் கூறினார்கள்.இதைத்தொடர்ந்து  சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை அழைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், ராமேஸ்வரம் கோவிலுக்கு இறந்த உறவினர்களுக்கு திதி கொடுக்க சென்றதாகவும்,   அதனால் அங்கேயே தேர்வு எழுதிவிட்டு வந்ததாகவும் கூறினார்கள். தேர்வர்கள் ஒரே மாதிரி அளித்த பதிலால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி  அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்வதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.ராமேஸ்வரம் ,கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு செய்ததை உறுதி செய்தது டிஎன்பிஎஸ்சி.மேலும் 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்துள்ளது.சம்மந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக  செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ராமேஸ்வரம் , கீழக்கரை தேர்வு மையங்களில் தவிர வேறு எந்த இடங்களிலும் தவறு நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

 

 

author avatar
murugan