96 _ல் சதமடித்த த்ரிஷாவை பாராட்டி தள்ளிய நடிகை……!!குவியும் பாராட்டு….மழையில் த்ரிஷா…!!!

நடிகர் விஜய்சேதுபதி நடிகை திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
Image result for 96 movie trisha
அறிமுக இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை திரிஷாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், நடிகை சமந்தாவும் திரிஷாவை பாராட்டியிருக்கிறார்.
Image result for samantha

96 படத்தை பார்த்த சமந்தா, திரிஷாவை பாராட்டி இருக்கிறார். அவர் பகிர்ந்து இருக்கும் ட்விட்டர் பதிவில் திரிஷாவை குறிப்பிட்டு நடிகை சமந்தா “96 படம் பார்த்தேன். என்ன ஓர் அற்புதமான நடிப்பு. நீங்கள் இதில் எப்படி நடித்துள்ளீர்கள் என என்னால் எப்படி துவங்கி விவரிப்பது எனத் தெரியவில்லை.ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரமான இதில் அற்புதமான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Image result for 96 movie trisha

தெலுங்கில் இந்த படம் நடிகர் நானி நடிப்பில் ரீமேக்காகிறது இந்நிலையில் படத்தில் திரிஷா வேடத்தில் நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் தெலுங்கில் இப்படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் மற்றொரு தகவல் வெளியுள்ளது.இது குறித்த அறிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் தெரிகிறது.
 

DINASUVADU
author avatar
kavitha

Leave a Comment