, ,

75வது சுதந்திர தினம்.! மீண்டும் கிரிக்கெட் களத்தில் கேப்டன் சவ்ரவ் கங்குலி.!

By

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சவுரவ் கங்குலி தலைமையில் இந்தியன்  மகாராஜா அணியும், மோர்கன் தலைமையில் கிரிக்கெட் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதனை மேலும் அழகூட்ட, செப்டம்பர் 16ஆம் தேதி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஸ்பெஷல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இதில் என்ன ஸ்பெஷல் என்றால், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும் ,  தற்போது பிசிசிஐ தலைவருமான சவ்ரவ் கங்குலி தலைமையில் இந்திய மஹாராஜா என்ற அணிக்கு தலைமை தாங்க உள்ளார்.

இந்திய மஹாராஜாஸ் அணியில், சௌரவ் கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுப் பதான், சுப்ரமணியம் பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்தீவ் படேல் , ஸ்டூவர்ட் பின்னி, எஸ் ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா , அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஜோகிந்தர் சர்மா மற்றும் ரீதிந்தர் சிங் சோதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதே போல உலக ஜாம்பவான்கள் எனும் அணியில், 2019 உலகக்கோப்பை இங்கிலாந்து அணி கேப்டன்  இயோன் மோர்கன் தலைமை தங்குகிறார். மேலும், லென்டில் சிம்மன்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஜாக் காலிஸ், சனத் ஜெயசூரியா, மாட் ப்ரியர் (வாரம்), நாதன் மெக்கல்லம், ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெய்ன், ஹாமில்டன் மசகட்சா, மஷ்ரப் மோர்டாசா, மஷ்ரப் மோர்டாசா, , பிரட் லீ, கெவின் ஓ பிரையன் மற்றும் டெனேஷ் ராம்டின் .

இதில் யார் அந்த பிளெயிங் 11 என அன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வருடங்கள் கழித்து தங்களது ஆஸ்தான நட்சத்திர வீரர்களை மீண்டும் கிரிக்கெட் களத்தில் பார்க்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.