விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பி சென்ற 72 வயது நபர்!

விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பி சென்ற 72 வயது நபர்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், சனிக்கிழமையன்று கஜகஸ்தானில் இருந்து டெல்லியில் தரையிறங்கிய 72 வயது நபர், கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பித்து, நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துக் கொண்டார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, கட்டாயத்  பரிசோதனைக்கு அவரது பெயர் அழைக்கப்பட்டபோது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.  இந்துஸ்தான் டைம்ஸின் ஒரு அறிக்கையின்படி, அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை காசியாபாத்தின் இந்திராபுரத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் கண்காணிக்கப்பட்ட நிலையில்,  அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என்றும், நிறுவன தனிமைப்படுத்தலைத் தவிர்ப்பதற்காக அந்த நபர் வேண்டுமென்றே கொரோனா சோதனையை தவிர்த்து விட்டார் என்றும் கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.