#BREAKING : 7 பேர் விடுதலை.., குடியரசு தலைவருக்கு முதல்வர் கடிதம்..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். இந்த 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்றும் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2018-ல் அமைச்சவையில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 7 பேர் விடுதலை பற்றி தமிழக அமைச்சரவை 9.9.2018 ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று விடுவிக்க வேண்டும். கொரோனா காலகட்டத்தில் 7 பேர் விடுதலை கோரிக்கையை குடியரசுத் தலைவர் பரிசீலிக்க வேண்டும் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குடியரசுத் தலைவர்அலுவலகத்தில் அளித்தார்.

author avatar
murugan