4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் கைது – சு.வெங்கடேசன் எம்பி

வெளியுறவு இணை அமைச்சரின் பதில் அரசின் செயலின்மையையே காட்டுகிறது என சு.வெங்கடேசன் எம்பி பதிவு.

இந்த ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், கடந்த 4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் கைது குறித்து சு.வெங்கடேசன் எம்பி கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். 99 படகுகள் கைப்பற்றப்பட்டதில் 93 படகுகள் மீட்கப்படவில்லை, 21 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில். அமைச்சரின் பதில் அரசின் செயலின்மையையே காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment