60,00,000 ஆதார் ரகசியம் அம்போ…அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆய்வாளர்…!!

  • இந்தியன் கார்ப்பரேஷன் 60 லட்சம் வாடிக்கையாளரின்ஆதார் தகவலை கசியவிட்டது அமபலமாகியுள்ளது.
  • பிரபல இணையதள ஆய்வாளரின் ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணை நிறுவனமான இண்டேன் நிறுவனம் 60 லட்சம் வாடிக்கையாளர்களின் ஆதார் மற்றும் விவரங்களை கசியவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இணையதள ஆய்வாளர் எலியட் ஆண்டர்சன் கணினி தகவல் திருட்டு மற்றும் இணைய மோசடி ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள தகவலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இன்டெல் நிறுவனம் சுமார் 60 லட்சம் வாடிக்கையாளரின் பெயர் முகவரி மற்றும் அடையாளம் உள்ளிட்ட ஆதார் தகவல்களை பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் வெளியிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்நிறுவனத்தின் இந்த திருட்டு ஆய்வை தாம் கண்டுபிடித்ததால் தற்போது என்னுடைய இணைய முகவரியை முடக்கியுள்ளனர். இதனால் தனது ஆய்வை மேற்கொண்டு தொடர முடியவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment