குரோஷியாவை 6.3 நிலநடுக்கம்.. 7 பேர் உயிரிழப்பு.!

மத்திய குரோஷியாவில் நேற்று ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது, தலைநகரின் தென்கிழக்கில் உள்ள ஒரு நகரத்தில் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

ஜாக்ரெப்பிலிருந்து தென்கிழக்கில் 46 கிலோமீட்டர் (28 மைல்) அளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. அதில், கூரைகள் இடிந்து விழுந்தது, கட்டிட முகப்புகள் மற்றும் சில முழு கட்டிடங்களும் கூட இடிந்து விழுந்ததாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதே பகுதியில் திங்களன்று 5.2 நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி, நிலநடுக்கத்தில் ஒரு சிறுமி கொல்லப்பட்டார் மற்றும் ஒரு சிறுவனும் இடிபாடுகளில் புதைக்கப்பட்ட காரில் இருந்து உயிருடன் வெளியே இழுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

தற்போது இன்றய நிலவரப்படி, குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமான  பலர் இடிபாடுகளில் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீட்பு குழுவினர் தீவர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.