பேரறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு தினம்! திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை!

இன்று பேரறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு தினம் அனுசரிக்கபட்டு வருகிற நிலையில், அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இன்று பேரறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.  இவர் தமிழகத்தில் ஆறாவது முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். திராவிட சிந்தனைகள் மக்கள் மத்தியில் கொண்டு சென்று, சீர்திருத்த திருமணம், இரு மொழிக் கொள்கை, தமிழ்நாடு என பெயர் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளில் நிகழ்த்தி விட்டு சென்ற மிகப்பெரிய ஒரு தலைவராவார்.

இந்நிலையில், சென்னையில் இன்று அவரது 52வது நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி நடத்தினர். இதில் திமுக கட்சியில் சேர்ந்த பலர் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், எம் பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.