#Breaking:இவர்களின் அமர்வுப்படி 10 மடங்கு உயர்வு;புதிய வாகனங்கள் – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் குடியரசு தினம்,தொழிலாளர் தினம்,சுதந்திர தினம், மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு சிறப்பு நாட்களில் மட்டுமே,கிராம சபை கூட்டம் 4 முறை நடத்தப்பட்டு வரும் நிலையில்,தமிழகத்தில் இனி 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி,தமிழகத்தில் ஜனவரி 26,மார்ச் 22,மே 1,ஆக.15,அக்டோபர் 2 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.மேலும்,சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.அதன்படி,

  • சிறப்பாக செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு “உத்தமர் காந்தி விருது” நடப்பு ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் எனவும்,
  • உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.