வாடிக்கையாளர்களின் ஆதாரத்தை வைத்து கடத்தல் கும்பலுக்கு சிம்கார்டு வழங்கிய 5 பேர் கைது!

சென்னையில் வாடிக்கையாளர்களின் ஆதாரத்தை வைத்து கடத்தல் கும்பலுக்கு சிம்கார்டு வழங்கிய 5 பேர் கைது.

சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பரை கடத்தி சென்று இரண்டு கோடி ஹவாலா பணத்தை கொள்ளை அடித்ததாக அண்மையில் தவ்பீக், உமாமகேசுவரனார் மற்றும் ஆல்பர்ட் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் ராயபுரத்தை சேர்ந்த மோனிஷா என்பவரின் பெயரில் அந்த செல்போன் நம்பர் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கே தெரியாமல் அவரின் ஆதார் நகலை பயன்படுத்தி பத்துக்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

புது வண்ணாரப்பேட்டையில் வசிக்கக்கூடிய அர்ஜுன் என்பவர் தனது மொபைல் கடையில் சிம் கார்டு வாங்க வந்த மோனிஷாவின் ஆதார் அட்டை நகல் எடுத்து அதன் மூலம் 10 சிம் கார்டுகளை உருவாக்கியுள்ளார். பின் அதை ஒரு கும்பல் வாங்கி கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சிம்கார்டு 3500 ரூபாய் வரை விற்கப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

author avatar
Rebekal