ஓபிஎஸ் பெயரை பயன்படுத்தி 47 லட்சம் மோசடி…! மதுரை எஸ்.பி-இடம் புகாரளித்த இளைஞர்…!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பெயரை சொல்லி ரூ.47 லட்சம் மோசடி.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த 2019-ல் இடுக்கியில் ஏலக்காய் ஸ்டேட் வாங்க முயற்சி செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கேரளாவை சேர்ந்த பாபு, மகேஷ் ஆகிய இருவரும் தென்காசியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மகன் என்று கூறி முருகேசன் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அவர் குறைந்த வட்டியில் ரூ.10 கோடி ரூபாய் பணம் பெற்று தருவதாக பிரவீனிடம்  தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள் மூவரும் இணைந்து மதுரை சேடப்பட்டி சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அவர் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நெருங்கிய உறவினர் என்றும், சேடப்பட்டி கூட்டுறவு வங்கி தலைவர் என்றும் பிரவினிடம் தன்னை அறிமுகம் செய்துள்ளார்.

இதனை அடுத்து, அவர் பிரவீனிடம் ஆவண செலவு மற்றும் ரொக்கம் கமிஷனாக 47 லட்சம் ரூபாய் பணத்தை முத்திரைத் தாளில் கையெழுத்திட்டு வாங்கியுள்ளார். ஆனால் பிரவீனை பணம் பெற்று தராமல் ஏமாற்றி வந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன், தன்னை ஏமாற்றிய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.