40 லட்சம் பேர் முன்பதிவு.! கைலாசவை அமைத்தே தீருவேன்.! சவால் விடும் நித்தியானந்தா.!

  • 2003-ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை. தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என நிரூபித்துள்ளேன்.
  • கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக பாலியல் சர்ச்சை, இளம்பெண் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் காவல்துறையால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, தினமும் சமூகவலைத்தளம் மூலம் அவரது, பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்களுக்கு போட்டியாக, நித்தியானந்தாவின் வீடியோக்கள் தினமும் டிரெண்டிங் ஆகி வருகிறது. அவர் பிரசங்கம் செய்து வெளியிடும் வீடியோக்கள், சிரிப்பை வரவழைப்பதால், அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வழக்கம்போல் சமூக வலைத்தளத்தில் சொற்பொழிவாற்றிய நித்யானந்தா. 2003-ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை. தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என நிரூபித்துள்ளேன். மேலும் ஆன்மீகத் துறையில் என்னை தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள். பின்பு கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் சற்று ஆவேசமாகப் பேசிய நித்யானந்தா சவால் விடுத்தார்.

இதனால் கண்டிப்பாக நான் ஆன்மிகத்தை வளர்ப்பேன் என்றும் கூறினார். பின்னர் கூறிய நித்தியானந்தா, நேரம் வரும் போது தேவைப்படும் செய்தியை தேவைப்படும் நேரத்தில் நானே வெளியிடுவேன் என்று குறிப்பிட்டார். இதனிடையே வரும் 18-ம் தேதிக்குள் நித்யானந்தாவை கண்டுபிடிக்க பெங்களூரு, காவல்துறைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்