#IPL2022: புவனேஸ்வர் குமார் செய்த தவறால் பட்லருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

ஐபிஎல் தொடரில் 5-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி, 5 ஓவர்களில் 4 நோ-பால் வீசினார்கள்.

ஐபிஎல் தொடரில் தற்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் களமிறங்கினார்கள். அதேபோல தொடக்க ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார்.

முதல் நான்கு பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்காத நிலையில், 5-ம் பந்தில் பட்லரின் விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் ஹைதராபாத் அணி மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அது சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. அந்த பந்து நோ-பாலாக மாறிய நிலையில், பட்டலருக்கு இன்று அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதனைதொடர்ந்து 2-வது ஓவரை மீண்டும் புவனேஸ்வர் குமார் வீசினார். 4-ம் பந்தில் மீண்டும் நோ-பால் வீசிய நிலையில், ஃபிரி-ஹிட் பந்தில் அவர் 4 ரன்கள் அடித்தார்.

உம்ரான் மாலிக் 3-வது ஓவரை வீச, அவரும் 3-வது பந்தில் நோ-பால் வீசினார். அதனைதொடர்ந்து வாஷிங்டன் சுந்தர், தனது முதல் பந்திலே நோ-பால் வீசினார். மேலும், புவனேஸ்வர் குமார் வீசிய இந்த நோ-பால், பட்லருக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம். தற்பொழுது 12 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் ராஜஸ்தான் அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் அடித்தது. களத்தில் சஞ்சு சாம்சன் 37 ரன்கள் மற்றும் படிக்கல் 16 ரன்கள் அடித்து விளையாடி வருகின்றனர்.