அம்மன் ஊர்வலத்தில் நடனம் ஆடுவது போல் வீடு புகுந்து கொள்ளை: 3 பேர் கைது

சென்னை : சேத்துப்பட்டு லோகய்யா தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (40), டெய்லர். நேற்று முன்தினம் அங்குள்ள அம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. இரவு அம்மன் வீதி உலாவின்போது இளைஞர்கள் நடனம் ஆடிக்கொண்டு சென்றனர். அப்போது, அம்மன் ஊர்வலத்தை பார்க்க வெங்கடேசன் குடும்பத்துடன் தெருவில் நின்று கொண்டிருந்தார். வீட்டின் கதவு திறந்து இருந்தது. அம்மன் சென்றதும் வீடு திரும்பியபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் பீரோவில் பார்த்த போது 5 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், 10 பட்டுப்புடவைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.

இதுகுறித்து அம்மன் ஊர்வலத்திற்கு பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம் வெங்கடேசன் புகார் அளித்தார். போலீசார் அம்மன் ஊர்வலத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடனம் ஆடிய சிலரை பிடித்து விசாரித்தனர். அப்போது சேத்துப்பட்டை சேர்ந்த விஜய், ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த விக்ரம் சூரியா (18), துரைப்பாக்கம், எழில் நகரை சேர்ந்த சூரியா (18) ஆகியோர், கூட்டத்தோடு கூட்டமாக நடனம் ஆடுவது போல் நடித்து திறந்து கிடக்கும் வீட்டிற்குள் புகுந்து திருடியதும், அவற்றை கூவம் கரையோரம் மறைத்து வைத்திருந்ததும் ெதரியவந்தது. இதையடுத்து போலீசார் மறைத்து வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளை தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment