மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் மீது மை வீசிய 3 பேர் கைது…!

பீகாரின் ஹாஜிபூர் நகரில் வைத்து மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் மீது மை வீசியதற்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய மந்திரி சபையில் உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில் துறை, முன்னாள் மத்திய அமைச்சரான மறைந்த ராம்விலாஸ் பஸ்வான் அவர்களின் சகோதரரும், ஜன்சக்தி கட்சி தலைவருமாகிய பசுபதி குமார் பராஸ் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பீகாரில் உள்ள ஹாஜிப்பூருக்கு பசுபதி குமார் அவர்கள் நேற்று முன்தினம் காரில் வந்த பொழுது, பசுபதி குமார் மீது  ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானின் ஆதரவாளரான பெண் ஒருவர் கருப்பு மையை தெளித்துள்ளார்.

இந்நிலையில், அவரது சட்டையில் மை கறை படிந்தததால், அவர் தனது சட்டையை மாற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் மீது மை வீசியது தொடர்பாக 11 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்பொழுது 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நவீன்குமார், அணில் பஸ்வான் மற்றும் திரிபுவன் பஸ்வான் ஆகியோர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மற்றொரு குற்றவாளி ஆகிய லட்சுமி தேவி எனும் பெண்மணி தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal