3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா- குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்கடந்த திங்கள் கிழமை காலை தொடங்கியது. இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாளே மக்களவை, மாநிலங்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலை அடுத்து மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

author avatar
murugan