2-வது டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவுக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயம்!

தென்னாபிரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.  முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விக்கெட் இழந்தது.
பொறுப்புடன் விளையாடிய கே.எல். ராகுல் 50, அஸ்வின் 46 ரன்களில்  ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

பின்னர், மீதம் இருந்த நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழந்து 35 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, நேற்றைய  2-நாள் ஆட்டம் தொடங்கியதிலிருந்து தென் ஆப்பிரிக்க நிதானமாக விலையாடி வந்தது. இருப்பினும்
இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் அடுத்ததுடுத்து விக்கெட்டை பறித்து தென் ஆப்பிரிக்க அணியை திணற செய்தார்.

ஷர்துல் தாகூர் அடுத்ததுடுத்து தொடர்ந்து 7 விக்கெட்டை பறித்தார். இதனால், தென்னாபிரிக்கா அணி 79.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 229 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 7, முகமது ஷமி 2 , பும்ரா 1 விக்கெட்டை  வீழ்த்தி அசத்தினர். தென்னாபிரிக்கா அணியில் கீகன் பீட்டர்சன் 62, பவுமா 51 ரன்கள் எடுத்தனர்.

நேற்றைய மீதம் இருந்த நேரத்தில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல் ராகுல் 8 ரன்னிலும், மயங்க் அகர்வால் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால்,  2- ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழந்து 85 ரன்கள் எடுத்தது. புஜாரா 35*, ரகானே 11* ரன்களுடன் களத்தில் இருந்தனர். அப்போது இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை இருந்தது.

இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய புஜாரா 53, ரகானே 58 ரன்களில் பெவிலியன் திரும்பினர். பின்னர் களம் கண்ட ஹனுமா விஹாரி மட்டும் 40 ரன் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். இறுதியாக இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 266 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டை இழந்தது. இதனால், தென்னாபிரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தென்னாபிரிக்கா  1 விக்கெட்டை இழந்து 61 ரன் எடுத்துள்ளது. தென்னாபிரிக்கா வெற்றி பெற 179 ரன்கள் மட்டுமே தேவை.

author avatar
murugan