இன்று இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி!

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, ஷிகர் தவான் தலைமையிலான படை சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி விளையாடி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 29ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு வார்னர் பார்க்கில் நடைபெறவுள்ளது. ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்தியதுபோல் டி20 தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்துமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment