‘கபாலி’, ‘பாகுபலி 2’ யை மிஞ்சும் விவேகம்!!!

தமிழகத்தில் மொத்தம் 1090 தியேட்டர்கள்தான் உள்ளது. ஆனால் இந்த 1090 தியேட்டர்களில் கிட்டத்தட்ட 990 தியேட்டர்களில் விவேகம் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினியின் ‘கபாலி’, எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ படங்கள் கூட இந்த அளவுக்கு பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவில்லை. எனவே இந்த படத்தின் ஓபனிங் வசூல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தும் என்றும் அந்த சாதனை முறியடிக்க முடியாத வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் முன்பதிவின் வேகமே வசூலில் செய்யப்போகும் சாதனைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
author avatar
Castro Murugan

Leave a Comment