‘வந்தே மாதரம்’ த்தால் கைகலப்பு

அவுரங்காபாத் : மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாநகராட்சி மன்ற கூட்டத்தில், ‘வந்தே மாதரம்’ பாடியபோது, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி உறுப்பினர்கள் எழுந்து நிற்கமறுத்ததால், கைகலப்பு ஏற்பட்டது.மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், அவுரங்காபாத் மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. துவக்கத்தில், ‘வந்தே மாதரம்’ தேசிய பாடல் பாடப்பட்டபோது, ஏ.ஐ.எம்.ஐ.எம்., எனப்படும், அகில இந்திய மஜிலிஸ் – இ – இத்தேஹதுல் முஸ்லிமின் கட்சியைச் சேர்ந்த, இரு உறுப்பினர்கள், எழுந்து நிற்க மறுத்தனர்.பாடல் முடித்ததும், பா.ஜ., – சிவசேனா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். ஏ.ஐ.எம்.ஐ.எம்., உறுப்பினர்களுடன், பா.ஜ., – சிவசேனா உறுப்பினர்கள், கைகலப்பில் ஈடுபட்டனர்.

Leave a Comment