தமிழகத்தில் 21 சட்டசபைத் தொகுதிகள் காலி!!!ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு !!

  • பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
  • ஓசூர் சட்டமன்ற தொகுதி  காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை:

திமுக ஆட்சிக்காலத்தில் ஓசூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல் வீசி , தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதையடுத்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது விளையாட்டு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு:

Image result for உயர் நீதி

இதன் பின்  3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு:

பின்   பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.பாலகிருஷ்ணரெட்டி விடுத்த கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் மறுப்பு :

Image result for உச்சநீதிமன்றம்

பின்  பாலகிருஷ்ண ரெட்டி தண்டனையை நிறுத்தி வைக்ககோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.4 வார காலத்திற்குள் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஓசூர் சட்டமன்ற தொகுதி காலி:

Related image

இந்நிலையில்  ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பொதுச்சொத்து சேத வழக்கில் பாலகிருஷ்ணரெட்டி தகுதி இழந்ததையடுத்து ஓசூர் தொகுதி காலியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதனால் ஓசூரையும் சேர்த்து தமிழகத்தில் 21 சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளது. மக்களவை தேர்தலோடு 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

Leave a Comment