மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 18,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,84,446 ஆக உயர்ந்தது.

அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 481 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,662 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 19,163 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,88,322 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 2,59,033 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஆந்திராவில் ஒரே நாளில் 6,133 பேருக்கு கொரோனா!

ஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,133 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியது.

இந்தநிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,133 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,93,484 ஆக உயர்ந்துள்ளது.

அதில் 71 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,828 ஆக உள்ளது. மேலும் 7,075 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,29,211 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி 58,445 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.