இத்தாலியில் கொரோனாவில் இருந்து மீண்ட 2 மாத குழந்தை.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழப்பின் எண்ணிக்கை 89,907 ஆகவும், வரைஸிலிருந்து குணமடைத்தவர்களின் எண்ணிக்கை 340,349 ஆகவும் உள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து உலக நாடுகள் போராடி வருகின்றன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, சீனா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரசால் ஐரோப்பிய நாடுகளில் பலவும் கொடூரமாக பாதிக்கப்பட்டாலும், இத்தாலியில் தான் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 139,422 ஆகவும், உயிரிழப்பு 17,669 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனிடையே கடந்த மார்ச் 18ம் தேதி தெற்கு நகரமான பாரியில் உள்ள மருத்துவமனையில் தாயும் இரண்டு மாத குழந்தையும் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுதான் நாட்டின் மிக குறைந்த வயது நோயாளி என கருதப்பட்ட 2 மாத குழந்தை, தற்போது கொரோனா வைரஸில் இருந்து முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்