15,000 பிரசவம் பார்த்த நரசிம்மா காலமானார்….ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி…!!

15,000 மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்த்து உதவிய 98 வயதான மூதாட்டியான நரசம்மா காலமானார். 
கர்நாடக மாநிலத்தில் உள்ள பவகடா வட்டத்தின் அருகில் கிருஷ்ணாபுரா என்ற கிராமத்தில் 1920-ம் ஆண்டில் பிறந்த சுலாகிட்டி நரசம்மா அந்த பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்து வந்தார். சுலாகிட்டி நரசம்மா , அவரது பாட்டியிடம் இருந்து பிரசவம் பார்க்கும் முறையை கற்றுக் கொண்டு, அதற்க்கு பின் தனியாக பிரசவம் பார்க்க ஆரம்பித்தார்.

15,000 பிரசவத்தை பார்த்த நரசம்மா காலமானார்

கிட்டத்தட்ட சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேல் சுலாகிட்டி நரசம்மா,இலவசமாக பிரசவம் பார்த்து ஆற்றிய சேவையை பாராட்டி கடந்த 2012-ம் ஆண்டுக்கான  சிறந்த குடிமகள் விருதும், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 25-ம் தேதி பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. இந்த சூழலில் தற்போது உடல்நலக்குறைவால் பெங்களூருவில் சுலாகிட்டி நரசம்மா காலமானார்.இவரின் மறைவுக்கு பல்வேறு பகுதியில் இருந்து வந்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment