125வது நாள் நோக்கி பயணிக்கும் நெடுவாசல் மக்களின் போராட்டம்…!

புதுக்கோட்டை, ஆக.15-

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 125வது நாளாக திங்கள்கிழமையன்றும் போராட்டம் தொடர்ந்தது.இரண்டாம் கட்டமாக 125-ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்றுவரும் போராட்டம் 71-ஆவது சுதந்திரதினமான இன்றும் (15.08.2017) காலை 9 மணி முதல் அப்பகுதி விவசாயிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்டக்குழு வினர் அறிவித்துள்ளனர்.

Leave a Comment