இந்தியாவுக்கு தமிழகம் முன்னோடி மாநிலம்: முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: தமிழகம் பல துறைகளில் முன்னேறி, இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.சென்னை ஜார்ஜ்கோட்டையில் முதல்வர் பழனிசாமி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக்கொடி ஏற்றினார்.பின்னர் அவர் பேசுகையில், சுதந்திரத்திற்காக பல சுதந்தர வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். போராட்டத்தில் உயர் தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்கள் நினைவிடங்களில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்கள், குடும்பத்திற்கும் ஓய்வூதியம், மருத்துவ வசதி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை ஆகியவை செயல்படுத்துகிறது. இந்திய நாட்டில் பாதுகாப்புக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.பாக்., போரின் போது தனது நகைகளை கொடுத்தவர் ஜெயலலிதா. நாட்டின் வளர்ச்சி என்பது தனிமனிதனின் வளர்ச்சியை அளவுகோளாக கொண்டது.ஜெயலலிதா முதல்வரான பின் தமிழகம் முன்னேறி வருகிறது.பொருளாதாரம், உணவு, கல்வி குடியிருப்பு தொழில், சுகாதாரம் பாதுகாப்பு தங்கு தடையின்றி கிடைப்பதில்தான் சுதந்திரத்தின் வெற்றி உள்ளது. இதில் தமிழகம் முன்னேறி, இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக உள்ளது.ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்ற உழைத்து வருகிறோம்எதிரில் வரும் தடைகளை தகர்த்து மக்களுக்காக சேவையாற்றுகிறோம். பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தொழில்துறையில் பல மாற்றங்கள் செய்து முதலீட்டாளர்கள் எளிதாக முதலீடு செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில்துறை பூங்காக்கள் உருவாக்க முயற்சி செய்யப்படுகிறது.

தடையில்லா மின்சாரம் உள்ளிட்டவற்றால் தமிழகம் தொழில்துறையில் முன்னேறி வருகிறது.தமிழகம், 1லட்சம் 26 ஆயிரம் 19 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது. தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12, ஆயிரத்திலிருந்து ரூ.13 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் அதிகரிக்கப்படும். 1,519 ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.3 ஆண்டுகளில் ரூ. ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய அணைகள் கட்டப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து விருதுகளை வழங்கி முதல்வர் கவுரவித்தார்.

Leave a Comment