பகுதிநேரமாக 7,700 ரூபாய் சம்பளம் பெற்று பணி செய்யும் 12,000 ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர கொடுக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி!

பகுதிநேரமாக குறைந்த சம்பளத்தில் பணி செய்யும் ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமால், மாத சம்பளம், போனஸ், வருடாந்திர ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, இறந்தவர் குடும்பநல நிதி காப்பீடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படாமல் வைத்திருப்பது மனிதநேயமற்ற நடவடிக்கையாகும்.

பகுதி நேரமாக இருந்தாலும் கூட ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகாவது தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் எனும் நம்பிக்கையில் தான் ஆசிரியர்கள் இந்த பணியை செய்து வருகின்றனர். ஆனால் 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாத பல ஆசிரியர்கள் உள்ளனர். இவ்வாறு மாதம் வெறும் 7 ஆயிரத்து 700 ரூபாய் வருமானமாக வாங்கிக்கொண்டு வேலை செய்யக்கூடிய 12 ஆயிரம் ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என கே எஸ் அழகிரி அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal