#BREAKING: +12 பொதுத்தேர்வு- 60 % பேர் ஆதரவு..?

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வை நடத்த கருத்து கேட்பில் 60 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 12 வகுப்பு தேர்வு மதிப்பெண்களை வைத்து தான் மாணவர்களின் எதிர்கால நிர்ணயிக்கப்படும் என்பதால் அரசு தேர்வை ரத்து செய்யுமா..? அல்லது மீண்டும் ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் கருத்துக்கேட்பு நடத்த அரசு திட்டமிட்டது.

அதன்படி, இன்றும் நாளையும் கருத்து கேட்டு நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் +2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பில் கல்வியாளர்கள்  பெற்றோர்கள் 60 % பேர் தேர்வை நடத்த வேண்டும் என தெரிவித்ததாக பள்ளி கல்விதுறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து கேட்பு நிறைவடைந்ததும் அறிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  நாளை மாலை வழங்கவுள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan