டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலுக்கு தமிழகத்தில் ஒரே நாளில் 10 பேர் பலி

Image result for dengue
 தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு இன்று ஒரே நாளில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கும்  மேலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சேலம் மாவட்டம் அழகம்  பாளையம்ப்புதூரில் திமுக நிர்வாகியின் மகன் இன்பரட்சகன் டெங்கு காய்ச்சலால் உயிரலந்தான். விருதுநகரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டிருத்த லலிதா  என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் லலிதா உயிர்பிரிந்தது.

நெல்லையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வியாபாரி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தைச்  சேர்ந்த மரவியாபாரியான ராஜாமணி என்பவர்(40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோவையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர் தனியார்  மருத்துவமனையில் உயிரிழந்தார். பழநி சாமிநாதபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8ம் வகுப்பு மாணவி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். புத்தூரைச் சேர்ந்த செல்வகுமார்  என்பவரின் மகள் கெத்தியா(14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை பாஸ்டின் நகரைச் சேர்ந்த அண்ணா மெயின் வீதியைச் சேர்ந்த கார்த்திக்   என்பவரின் 10 வயது மகன் கிருஷ்ணராஜ் உயிரிழந்தார். மர்ம காய்ச்சலுக்கு அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தைச் சேர்ந்த ராஜாமண சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலூர் அரசு  மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த திருவாளி என்பவரும் உயிரிழந்தார். பொள்ளாச்சி அருகே கணபதி பாளையத்தை சேர்ந்த சிறுவன் சபரிநாதன் காய்ச்சலால் உயிரிழந்தார்.  மதுரை பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த தேவி என்பவர் வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தார். தஞ்சை திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் எனும் விவசாயி மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்,
இதனால் சிறந்த மருத்துவ வசதி வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுரிதிவருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.