10,000-பேர் பங்கேற்ற பிரச்சார பேரணியில் குக்கரை உடைத்தெரிந்தார் மாஃபா பாண்டியராஜன்!

ஆர் கே நகரில் அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனன் அவர்களை ஆதரித்து கொருக்குப்பேட்டை  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் இரட்டைஇலைக்கு வாக்கு சேகரிக்க 10,000-பேர் பங்கேற்ற மாபெரும் பிரச்சார பேரணி நடைபெற்றது.

இதில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் பிரச்சார கூட்டத்தை உடைத்தெரியும் அளவுக்கு பண்மடங்கு கூட்டத்தை கடல் அலைப்போல் காட்சியளிக்கும் அளவுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தன் பலத்தை காட்டி அசத்திவிட்டார்.

திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் வேட்பாளர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி,  ஆர். வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி சிக்கரந்தபாளையம், மீனாம்பாள் நகர், பாரதி நகர் ஹரிநாராயணாபுரம், உள்ளிட்ட பகுதி வழியாக சென்று முடிந்தது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment