10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகளும் கதவணைகளும் கட்டப்படும்..!

10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகளும் கதவணைகளும் கட்டப்படும்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாபட்ஜெட்டை  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில்,  கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.9,370 கோடி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகளும் கதவணைகளும் கட்டப்படும். மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் அளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.8,437 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறைக்கு பட்ஜெட்டில் 80.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறை சுமார் 6 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan