அரசு தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்..!

அரசுத் தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதாவை நேற்று ராஜஸ்தான்  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தால் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் மசோதாவை ராஜஸ்தான் அரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. ராஜஸ்தான் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கான (REET) வினாத்தாள் கசிவு குறித்து பெரும் பிரச்சனைக்கு பிறகு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ராஜஸ்தான் பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிகளைப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களைத் தடுக்க இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டத்தின் கீழ் ஒரு நபர் பொதுத் தேர்வில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  பதிவுசெய்யப்பட்ட, நகலெடுக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பேப்பர்  போன்றவற்றை  பயன்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்திற்கு குறையாத அபராதம் என்று மசோதா கூறுகிறது.

author avatar
murugan