அவரது திறமையில் 10 சதவீதம் கூட என்கிட்ட இல்லை …!இந்திய அணி கேப்டன் விராட் கோலி

முதல் தொடரிலேயே ஒரு வீரர் இது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தவது இந்திய அணிக்கு நல்ல அறிகுறி என்று நினைக்கிறேன்” என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை(அக்டோபர் 13 ஆம் தேதி) தொடங்கியது.இந்த போட்டியிலும்  இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதனால் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் பிரிதிவி ஷாவிற்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது. அதேபோல் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றி தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், பிரித்வி ஷா, ரிஷப் என இளம் வீரர்கள் சுதந்திரமாக, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த கட்டத்தில் எப்படி ஆட வேண்டும் என்பது இருவருக்கும் தெரிந்துள்ளது.இந்திய அணியில் அவர்களுக்கான இடத்தைப் பிடித்துவிட்டார்கள்.
Related image
இந்திய அணியில்  பிரித்வி ஷா போன்ற அச்சமில்லாத வீரர்கள் இருப்பது சிறப்பு. ஆனால் அவர் அஜாக்கிரதையாகவும் ஆடவில்லை. தனது ஆட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார் பிரித்வி. எதாவது ஒரு பந்தை எட்ஜில் வாங்கி ஆட்டமிழப்பார் என்று அனைவரும் நினைப்போம். ஆனால் அவர் அப்படி ஆடவில்லை.
Image result for virat kohli
பிரித்வி ஷாவின் வயதில், அவரது திறமையில் 10 சதவீதம் கூட எங்களிடம் இல்லை. அவர் இந்த ஆட்டத்தை தக்கவைக்க வேண்டும். தனது முதல் தொடரிலேயே ஒரு வீரர் இது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தவது இந்திய அணிக்கு நல்ல அறிகுறி என்று நினைக்கிறேன்” என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  தெரிவித்துள்ளார்.

Leave a Comment