1.6 லட்ச ரூபாய் கைப்பை விவகாரம்.! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி.!

1.6 ;லட்சம் மதிப்பு இருக்கும் என கூறப்படும் அந்த விலையுயர்ந்த கைப்பையை அடிக்கடி தான் கொண்டு வந்துள்ளதாக அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் எம்.பி மஹுவா மொய்த்ரா .

காலையில் ஒரு நாடாளுமன்ற வீடியோ ஒன்று மிகவும் வைரலானது. அதில், மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா தனது கைப்பையை எடுத்து காலுக்கு கீழே வைத்தார்.

விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டிருந்த போது, மஹுவா மொய்த்ரா அருகில் உள்ள எம்பி பேசி கொண்டு இருக்கையில் இந்த செய்கையை அவர் செய்து இருந்தார்.

இது குறித்து சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, அந்த பையின் விலை கூட 1.6 லட்சம் என வைரலானது. ஆனால், தற்போது, எம்.பி மஹுவா மொய்த்ரா தனது டிவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பல முறை நான் இந்த கைப்பையை கொண்டு வந்துள்ளேன் என போட்டோ பதிவிட்டுள்ளார்.

author avatar
Castro Murugan

Leave a Comment