Categories: இந்தியா

1.33 கோடி மக்கள் நோட்டா’வுக்கு வாக்கு!புதிய தகவல்…

 மக்களவைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற ‘நோட்டா’வுக்கு கடந்த 5 ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஏறக்குறைய 1.33 கோடி மக்கள் வாக்களித்து, ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை  புதுடெல்லியைச் சேர்ந்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு(ஏடிஆர்) நாட்டில் நடந்த சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் பதிவான நோட்டா வாக்குகள் குறித்து ஆய்வு செய்தது. அது குறித்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த 2013 முதல் 2017-ம் ஆண்டுவரை நடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு ஆதரவாக, ஒரு கோடியே 33 லட்சத்து 9 ஆயிரத்து 577 வாக்குகள் பதிவாகியுள்ளன. சராசரியாக தேர்தல் ஒன்றுக்கு 2.70 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்புதெரிவித்துள்ளது.

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு அல்லது வாக்குச்சீட்டு முறை வாக்குப்பதிவில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை அதாவது ‘நோட்டா’ முறையை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 2013ம்ஆண்டு செப்டம்பர் 27-ம்தேதி உத்தரவிட்டது. மேலும், நோட்டாவுக்கு வாக்களிப்பவர்களின் ரகசியமும் காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.

இதன்படி 2013ம் ஆண்டு முதல்முறையாக சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், டெல்லி, மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

2014-ம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நோட்டா 1.08 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதாவது, 60 லட்சத்து 2 ஆயிரத்து 942 வாக்குகள் பெற்றது. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் நீலகிரி தொகுதியில் 46ஆயிரத்து 559 வாக்குகளும், மிகக் குறைவாக லட்சத்தீவுகளில் 123 வாக்குகளும் பதிவாகின.

இதில் கடந்த 2015ம் ஆண்டு பீகார், டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்அதிகபட்சமாக நோட்டாவில் 2.08 சதவீத வாக்குகள் பதிவாகின. பிஹார் மாநிலத்தில் 9.47 லட்சம் வாக்குகளும், டெல்லியில் 35 ஆயிரத்து 897 வாக்குகளும் பதிவாகின.

மேலும், கோவா, டெல்லி, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தலில் முக்கியக்க ட்சிகளைத் தவிர்த்து அடுத்தபடியாக அதிகபடியான வாக்குகள் பெற்ற இடத்தில் நோட்டா இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

பிரதமர் மோடி பற்றி அவதூறு.. 100 கோடி ரூபாய் பேரம்.! டி.கே.சிவகுமார் மீது பரபரப்பு குற்றசாட்டு.!

சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி…

32 mins ago

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி !! ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி…

41 mins ago

ஒழுங்கா நடிக்கலைனா அடிப்பாரு! மம்முட்டி குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன பிரபலம்?

சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி.…

2 hours ago

ஹோட்டல் சுவையில் நூடுல்ஸ் இனி வீட்டிலேயே செய்யலாம்.!

Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…

2 hours ago

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

4 hours ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

11 hours ago