விஸ்வாசம் vs பேட்ட! ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

தல அஜித்  நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படம் தீபாவளி ரிலீஸாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஷூட்டிங் தள்ளி போனதால் பொங்கலுக்கு ரிலீஸாக தயாராகி வருகிறது.

அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படம் பேட்ட. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்பட ஷூட்டிங் ஆரம்பித்து வேகமாக படம் வளர்ந்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படமும் பொங்கல் ரிலீஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் தற்போது இரண்டு படங்களின் படக்குழுவும் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன் படி ஜனவரி மாதம் 10 (வியாழன்) அன்று தல அஜிதின் விஸ்வாசமும், ஜனவரி மாதம் 11(வெள்ளி) அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் வெளியாகும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Source : CINEBAR

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment