விஸ்வாசம் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி வெளியான ருசிகர தகவல்!!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. 

இத்திரைப்படத்தின் இரண்டு மோஷன் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதன் சேட்டிலைட் உரிமையை  சன் டிவி கைப்பற்றியுள்ளது. இதன் ட்ரெய்லர் பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் டீசர் வெளியாக இருந்த நிலையில் நெல் ஜெயராமனின் மறைவின் காரணமாக டீசர் தள்ளிவைக்கப்படுவதாக கூறப்பட்டது. இதன் ட்ரெய்லரை ஜனவரி 1ஆம் தேதியன்று வெளியாகும் என கூறப்படுகிறது. வீரம் படத்தின் டிரைய்லரும் புத்தாண்டில் வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது. 

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment