விடிய விடிய டிக்கெட் வாங்க காத்திருந்த ரசிகர்கள் …!டிக்கெட் விலையை கண்டு அதிர்ச்சி?கவுன்டரில் விழி பிதுங்கிய ரசிகர்கள்…!

சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணி, விளையாடவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் அனைத்து ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளும் எளிதில் விற்றுவிடும் என்று தெரிகிறது.

எனினும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஆட்டங்களுக்குக் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற நகரங்களை விடவும் சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விலை அதிகமாக உள்ளதாக ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் தளத்தில், அடுத்தவன் ஆசைய எப்பிடி பணம் ஆக்கி லாபம் பண்றது??? இவுங்கல @ChennaiIPL பாத்து கத்துகிடனும் #unfairticketpricing #IPL2018 என்று ஒரு ரசிகர் ட்வீட் செய்திருந்தார். வழக்கமாக, இதுபோன்ற ரசிகர்களின் புகார் ட்வீட்கள் கண்டுகொள்ளாமல் விடப்படும். ஆனால் ஆச்சர்யப்படும் விதத்தில் சிஎஸ்கே நிர்வாகம் இந்தப் புகாருக்கு ட்விட்டர் வழியாகப் பதில் அளித்துள்ளது.இதற்காக வருந்துகிறோம். ஜிஎஸ்டி + உள்ளூர் வரியுடன் சேர்த்து வசூலிப்பதால் கட்டணம் அதிகமாக உள்ளது. மற்ற ஐபிஎல் மையங்கள் ஜிஎஸ்டி மட்டும்தான் வசூலிக்கிறது. இங்கு நாங்கள் உள்ளூர் வரியையும் செலுத்தவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது. எதன் அடிப்படையில் ரூ. 1300 என்கிற மற்றொரு கேள்விக்கு சிஎஸ்கேவின் பதில்:

அடிப்படை விலை – ரூ. 762 + உள்ளூர் கேளிக்கை வரி ரூ. 254 + ஜிஎஸ்டி ரூ. 284 = ரூ. 1300.

காலை 9.30 மணிக்குத் தொடங்கிய டிக்கெட் விற்பனைக்கு நேற்று இரவிலிருந்தே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிய தொடங்கினர். விக்டோரியா சாலையில் உள்ள 6-ம் நம்பர் கவுன்ட்டரில் இதற்கான டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டன.

குறைந்தபட்சமான ரூ.1,300 டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் குவிந்து நின்றனர். ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்களுக்கு மேல் வழங்கப்படவில்லை. இதேபோல ஆன்லைனிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை அணி விளையாடவுள்ளதால் நீண்ட வரிசையில் டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இருந்தாலும் டிக்கெட் விலையை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியாகத் தான் செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment