விஜய்மல்லையா மற்றும் நீரவ்மோடியை தொடர்ந்து,மோசடி செய்த சீனிவாச கிருஷ்ணா ராவ்..!

போலி ஆவணங்கள் மூலம் கடன் கடன் பெற்று, வங்கி மோசடி செய்த விவகாரத்தில்,விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி ஆகியோருக்கு அடுத்த படியாக   சிபிஐ முன்னாள் இயக்குனரின் மகன் மீது, மூன்றாவது வழக்கை சி.பி.ஐ. பதிவுசெய்துள்ளது.இதற்க்கு முன் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் அண்ணா நகரில் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவின் வீட்டில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அண்ணா நகர் பகுதியில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சிபிஐ முன்னாள் இயக்குனர் விஜய் ராமா ராவ் மகன், சீனிவாச கிருஷ்ணா ராவ் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட best and crompton இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தார்.இவர் கார்ப்பரேஷன் வங்கியில் வாங்கியிருந்த கடன் திகை போலியான முறையில் வாங்கப்பட்டது என்றும் இவர் மீது, வங்கி மோசடிப் பிரிவு சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கார்ப்பரேஷன் வங்கியில் 124 கோடி ரூபாய் பணத்தை போலி ஆவணங்கள் மூலமும், தவறாக ஆண்டு வருமானத்தை கணக்குக் காட்டியும் கடன் பெற்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் தான் வாங்கிய கடனை, வேறு நிறுவனத்திற்கு மாற்றியதும் தெரியவந்தது.

இதேபோன்று  சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா , ஆந்திரா வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. மொத்தமாக இந்த மூன்று வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து 304 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment