வரலாற்றில் இன்று-சோவியத் யூனியனை நிர்மானித்தவரான வரலாற்றுத் தலைவர் விளாடிமிர் லெனின் மரணம் அடைந்தார்…!!

ஜனவரி 27- வரலாற்றில் இன்று – 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் சோவியத் யூனியனை நிர்மானித்தவரான வரலாற்றுத் தலைவர் விளாடிமிர் லெனின் மரணம் அடைந்தார். லெனினின் உடல் கெடாத வண்ணம் ரசாயன தைலங்களைக் கொண்டு பதப் படுத்தப்பட்டு மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் ஜனவரி 27ம் நாள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. துவக்கத்தில் அனைத்து மக்களும் பார்வையிட ஒரு மாத காலம் மட்டுமே லெனினின் உடலைப் பாதுகாத்திடக் கருதியிருந்தனர். அதன்பிறகு மக்கள் லெனின் மீது காட்டிய அளவற்ற மதிப்பையும் மரியாதையையும் கண்டு அதனை நிரந்தரமாக பாதுகாக்கும் முடிவை மேற்கொண்டனர். 2012ம் ஆண்டு லெனின் உடலை அடக்கம் செய்துவிடலாம் என ரஷ்ய அரசு முடிவு செய்த போதிலும் அம்முடிவை அமல் படுத்தும் துணிச்சல் இன்றி லெனின் உடல் இன்னமும் கூட மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் லெனின் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment