“ரஜினியுடன் எந்த வித்தியாசமும் இல்லை” மனம் திறந்த நடிகை திரிஷா..!!

“பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கும்போது, ஜூனியர்-சீனியர் என்ற வித்தியாசம் தெரியவில்லை” என்று நடிகை திரிஷா கூறினார்.
சென்னை,
திரிஷாவும், விஜய் சேதுபதியும் முதல் முறையாக, ‘96’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பிரேம்குமார் டைரக்டு செய்து இருக்கிறார். நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.
அதில் திரிஷா, விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது திரிஷாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு திரிஷா அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த அனுபவம் எப்படியிருந்தது?
பதில்:- சந்தோஷமாக இருந்தது. அவர் படத்துக்கு படம் இளைஞர் ஆகிக்கொண்டே போகிறார். அவருக்கு போட்டியாக நானும் என் தோற்றத்தை இளமையாக்கி கொண்டேன். முன்பை விட, என் உடல் எடையை குறைத்து இருக்கிறேன்.
கேள்வி:- அவருடன் நடித்தபோது உங்களுக்கு ‘ஜூனியர்-சீனியர்’ என்ற வித்தியாசம் தெரியவில்லையா?
பதில்:- எனக்கும் சரி, அவருக்கும் சரி, ஜூனியர்-சீனியர் என்ற வித்தியாசம் தெரியவில்லை. இருவரும் கதாபாத்திரங்களாக இருந்தோம். நடிப்பில், அவருடன் போட்டி போட முடியாது. ஒரே டேக்கில் நடித்து விட்டு போய் விடுகிறார். அவருக்கு சமமாக நடிப்பது, சிரமமாக இருந்தது. இவ்வாறு திரிஷா பதில் அளித்தார்.
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment