மேகதாது அணை விவகாரம்..!கர்நாடக மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு..!!!

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் சுமார் 5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு சாத்திய கூறு இருப்பதாக தனது அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தது.ஆனால் இதனை தமிழக அரசு எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம் ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக  மாநில நீர்ப்பாசனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
Related image

இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து மட்டுமல்லாமல் தமிழக சட்டமன்றத்தை கூட்டி இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்ற உள்ள நிலையில் அனுமதி வழங்கிய மத்திய அரசு மற்றும் திட்டத்தில் உறுதியாக உள்ள கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே தாக்கல் செய்துள்ளார்.
Image result for MEKEDATU PROJECT
வழக்கில் மத்திய நீர்வள ஆணைய திட்ட அனுமதி இயக்குநராக இருக்கும் என். முகர்ஜி மற்றும் மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன் கர்நாடக மாநில காவிரி நீராவாரி நிகாம் நிறுவன நிர்வாக இயக்குநர் மல்லிகார்ஜூன் பி குகே மற்றும் கர்நாடக மாநில நீர்பாசனத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் மற்றும் அம்மாநிலத்தின் நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் ஆகியோர் மீது மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கானது கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இருமாநில காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம் தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Image result for MEKEDATU PROJECT
 
மேலும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டு குறிப்பிடப்படும் 5 பேரையும் நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் மற்றும் கர்நாட அரசிற்கு  அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பு செயல்களில் கர்நாடகவோ , மத்திய அரசோ தலையீடாமல் இருக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

author avatar
kavitha

Leave a Comment